தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல் முறை

  • Home
  • தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல் முறை
தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல் முறை

தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல் முறை

இந்த குளியல் முறை தீய ஆற்றல்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவியாக இருக்கும், மேலும் தீய ஆற்றல்கள் அண்டாமல் பாதுகாக்கவும் உதவும். தாய்லாந்தில் பௌத்த மடாலயங்களில், தீய ஆற்றல்களை மனிதர்களின் உடலிலிருந்து வெளியேற்ற பௌத்தத் துறவிகள் இந்த வழிமுறையை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.

தேவையான பொருட்கள்

7 வர்ணங்களைக் கொண்ட 7 வகையான மலர்கள்
2 பெரிய எலுமிச்சைப் பழங்கள்
1 கைப்பிடி கல்லுப்பு
1 பாட்டில் பன்னீர்
1 பாட்டில் அத்தர் (வாசனை திரவியம்)

கடைகளில் வாங்கியதோ, தோட்டத்தில் பறித்ததோ, தெருவோரம் முளைத்ததோ, எந்த மலர்களையும் பயன்படுத்தலாம். ஆனால் முட்கள் இருப்பவற்றையும் கருப்பு வர்ணம் கொண்டவையையும் பயன்படுத்தக் கூடாது. வாசனையுள்ள மலர்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எலுமிச்சைகள் குறைகள், தழும்புகள் இல்லாதவையாக இருக்க வேண்டும்.

அந்திசாயும் நேரத்தில் மாலை 7 மணிக்கு ஒரு வாளியில் ¾ அளவு தண்ணீர் நிறைத்து. அதில் மலர்களை கொட்டி. பன்னீரையும், அத்தரையும் அதில் ஊற்றி. கல்லுப்பைப் போட்டு, எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.

மறுநாள் காலையில் வாளியில் ஊறும் எலுமிச்சங்காய்களை பிழிந்து அந்த வாளி தண்ணீரில் விட்டுவிட வேண்டும். எப்போதும் குளிப்பதைப் போன்று சாதாரணமாக குளித்து முடிந்த பிறகு. வாளியில் ஊறும் பூ தண்ணீரில் குளிக்க வேண்டும். வாளியில் இருக்கும் பூக்களையோ எலுமிச்சையையோ வெளியேற்றக் கூடாது. குளிக்கும் போது பூக்களையும் எலுமிச்சை கனிகளையும் தண்ணீருடன் கலந்து அள்ளி ஊற்றிக் குளிக்கலாம்.

குளிக்கும் முறைகள்

1. முதலில் உடலின் இடது புறமாக மூன்று முறைகள் ஊற்றவேண்டும்.
2. பிறகு வலது புறமாக மூன்று முறை ஊற்ற வேண்டும்.
3. மீதமிருப்பவை அனைத்தையும் தலையில் ஊற்றிக் குளிக்க வேண்டும்.
4. குளித்த பிறகு அதிகமாக துவட்டக் கூடாது
5. உடலை சுயமாக காய விடுவது நல்லது.

வாழ்க்கையில் அதிகப் பிரச்சினைகள், துன்பங்கள் உருவானாலோ, ஆவி கோளாறுகள், அமானுஷ்யத் தொந்தரவுகள் உருவானாலோ, இந்த பூ குளியல் அவற்றைச் சரிசெய்ய உதவும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த பூ குளியல் செய்துவந்தால், வாழ்க்கையை நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping