தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள்

  • Home
  • தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள்
தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள்

தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள். ஒரு தனி நபரின் உடலில் தீய ஆற்றல்கள் நுழைவதற்கும் சேருவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அந்த நபர் பின்பற்றும் தவறான உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கை முறைகள், தவறான பழக்க வழக்கங்கள். அவரை சுற்றி வாழும், தீய மனிதர்களின் எண்ணங்கள், செயல்கள், மற்றும் பழக்கவழக்கங்கள்.

ஒழுக்க ஈனமான செயல்கள் நடைபெறும் இடங்களிலும், அறத்துக்குப் புறம்பான விசயங்கள் நடைபெறும் இடங்களிலும், விபத்து மற்றும் மரணங்கள் நடைபெற்ற இடங்களிலும் இருக்கும் தீய அலைகள் கூட, அங்குப் பணிபுரியும் மற்றும் அங்குச் செல்லும் மனிதர்களின் உடலில் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இயற்கையில் உண்டாகும் மாற்றங்களும் சீற்றங்களும் கூட, உடல் நிலையிலும் மன நிலையிலும் மனிதர்களிடம் சில மாற்றங்களை உருவாக்கலாம்.

உணவு முறைகள்

இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு முறைகளைப் பின்பற்றுவதனால் மனிதர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகிறார்கள். இன்றைய மனிதர்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளையும், எளிதில் ஜீரணிக்க முடியாத உணவுகளையும், இரசாயனங்கள் கலந்த உணவுகளையும், மாமிசங்களையும், அதிகமாக உட்கொள்கிறார்கள். இவற்றால்தான் உடலில் சத்துக் குறைபாடும், சோர்வும், நோய்களும், உடல் உறுப்புகளில் குறைபாடுகளும் அதிகமாக காண முடிகிறது.

தவறான வாழ்க்கை முறைகள்

மது அருந்துதல், புகை பிடித்தல், சூதாடுதல், விபச்சாரம் செய்தல், போன்ற செயல்களும். ஆணவம், திமிர், கர்வம், கோபம், பயம், எரிச்சல், பொறாமை, போன்ற குணக்கேடுகளும் மனிதர்களின் உடலில் தீய ஆற்றல்களையும், பலவீனங்களையும், நோய்களையும் உருவாக்குகின்றன.

சுற்றி இருக்கும் மனிதர்கள்

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் தொழில் செய்பவர்கள், மற்றும் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களும் நமது ஆற்றல் பாழடையக் காரணமாக இருக்க முடியும். நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களால் நமது, ஆற்றல், ஆரா, அதிர்வு, மனம், மற்றும் சிந்தனையும் மாறுபாடு அடையலாம் அதனால் வாழ்க்கையில் தொந்தரவுகளும் நோய்களும் உருவாகலாம்.

இடங்கள்

விபத்து நடந்த இடம், மரணம் நடந்த வீடு, மருத்துவமனை, பிணவறை, மயானம், மதுக்கடை, விபச்சார விடுதி, போன்ற இடங்களுக்குச் செல்லும்போது சிந்தனை, எண்ணம், உணர்வு, உணர்ச்சி, ஆற்றல் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம். வாழ்க்கையில் தொந்தரவுகளும் நோய்களும் உண்டாகலாம். இது போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் தீய ஆற்றல்களும் அவர்களுக்குள் பதிவாகலாம், பரவலாம்.

இயற்கையின் மாற்றங்கள்

சக்தி நிலையில் அனைத்து படைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டிருப்பதனால், இயற்கையில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றங்களும் மனிதர்களிடம் சில மாறுதல்களை உண்டாக்கலாம். நிலத்தில், மலையில், காற்றில், கடலில், மழையில், வானிலையில், என, பூமியில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றமும் மனிதர்களிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும், பிற உயிரினங்களிடமும் சில மாறுதல்களை உண்டாக்கலாம்.

பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் அசைவும், இந்த பூமியில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் மாற்றமும் கூட அவற்றுக்கு நேரடித் தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கலாம். நிலவிலும், சூரியனிலும், மற்ற கிரகங்களிலும் உருவாகும் மாற்றங்களும் மனிதர்களின் மனநிலையையும் சிந்தனையையும் மாற்றலாம். அதனால் வாழ்க்கையில் எதிர்பாராத சில நன்மையான அல்லது தீமையான மாறுதல்கள் உண்டாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping