ரெய்கி தமிழ் இணையத்தள அறிமுகம்

  • Home
  • ரெய்கி தமிழ் இணையத்தள அறிமுகம்

ரெய்கி தமிழ் இணையத்தள அறிமுகம்.

இந்த இணையத்தளத்தை உருவாக்கும் பணியிலும், எழுத்துப் பணியிலும் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த எல்லாம்வல்ல பரம்பொருளுக்கே புகழ்கள் அனைத்தும். ரெய்கி எனும் அற்புதக் கலையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இந்த இணையதளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக, நான் ரெய்கி கலையை பயிற்சி செய்து வருகிறேன். ரெய்கி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது? அதன் தன்மைகள் என்ன? அதன் நன்மைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். அவற்றின் மூலமாக நான் பெற்ற அனுபவங்களை இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

ரெய்கி என்பது பத்தோடு பதினொன்றாக கற்றுக் கொள்ளக்கூடிய சாதாரணக் கலையல்ல. இது முழு அர்ப்பணிப்போடும் தூய உள்ளத்தோடும் அறிந்துகொண்டு தொடர்ந்து பயிற்சிசெய்ய வேண்டிய புனிதக் கலையாகும். கர்வமும் பேராசையும் இல்லாத தூய உள்ளத்தோடு தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் இக்கலையில் உயரிய நிலையை அடையலாம்.

ரெய்கி கலையை பணம் செய்யும் மந்திர வித்தையென சிலர் எண்ணுகிறார்கள். ரெய்கியை பயன்படுத்தி குறுக்கு வழியில் அதை அடையலாம், இதை அடையலாம் என்று கூறுவதெல்லாம் வியாபார நோக்கங்களுக்காக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் மட்டுமே. இது ஒரு வாழ்வியல் கலை, மனித வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் புரிதலோடும் வாழ்வதற்கு உதவும் கலை.

இந்தக் கலையை முழுமையாக, அறிந்து, புரிந்து, உணர்ந்து, முறையாக பயிற்சி செய்து வரும்போது, உங்களுக்குள் பல மாறுதல்கள் உண்டாவதை உங்களால் உணர முடியும். உங்கள் வாழ்க்கை, சிந்தனை, புரிதல், உறவு, நட்பு, பொருளாதாரம், என அனைத்து நிலையிலும் மேன்மை உண்டாகும். நீங்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

இந்த இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை ஒருமுறைக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். அவற்றின் உள்ளடக்கங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் தோன்றினால் அந்த கட்டுரைக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

We don’t spam! Read our privacy policy for more info.

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping