நமது ரெய்கி பயிற்சி வகுப்புகளில் புதிதாகப் பதிந்து கொள்ளும் அத்தனை மாணவர்களுக்கும் இருபத்து நான்கு மாதக் காலப் பயிற்சி உறுப்பியம் வழங்கப்படும். இந்த இருபது நான்கு மாதங்களில் அவர்கள் அதே நிலை பயிற்சியில் மீண்டும் மீண்டும் கட்டணமில்லாமல் அல்லது மிகக் குறைவான கட்டணம் செலுத்திக் கலந்துகொள்ளலாம். நமது ரெய்கி பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் முழுமையான பயனைப் பெறுவதற்கு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
1. கட்டணத்தில் எந்தக் கழிவும் வழங்கப்படாத மாணவர்களுக்கு மட்டுமே இந்த உறுப்பியம் வழங்கப்படும்.
2. இந்த உறுப்பியப் பதிவு முழுக்க முழுக்க இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும். வாட்சப் மற்றும் மற்ற வகையான பதிவுகள் ஏற்கப்படமாட்டாது.
3. பயிற்சி உறுப்பியம் நான்கு நிலைகளில் வழங்கப்படும்.
4. இந்த உறுப்பியத்துக்குக் கட்டண செலுத்தவோ, புதுப்பிக்கவோ தேவையில்லை.
5. இந்த உறுப்பியத்தின் கால அளவு, முதல் வகுப்பின் மாதத்திலிருந்து இருபத்து நான்கு மாதங்களுக்குச் செல்லுபடியாகும்.
6. மாணவர்கள் தொடக்கத்தில் பதிவு செய்த அதே நிலை வகுப்புகளில் மட்டுமே மீண்டும் மீண்டும் கலந்துகொள்ளலாம். தீட்சையோ சான்றிதழோ வழங்கப்பட மாட்டாது.
7. இந்த இணையதளத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு தானாக உறுப்பியம் வழங்கப்படும்.
8. நமது ரெய்கி பயிற்சிகளில் புதிதாகக் கலந்துகொண்டு கழிவு எதையும் பெறாதவர்கள் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு, தங்களின் விவரங்களை +60103343346 என்ற எண்ணிற்கு வாட்சப் அனுப்பலாம்.
பதிவு செய்திருந்த பெரும்பாலான மாணவர்களுக்கு வகுப்பு உறுப்பியம் வழங்கப்பட்டுவிட்டது. https://www.holisticrays.com/my-account/ என்ற இணையப்பக்கம் மூலமாக அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
Interested in class sir