ரெய்கி எனும் பேராற்றல்.
ரெய்கி (Reiki) என்பது இயற்கையில் அமைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றலாகும். இது ரெய்கி மாஸ்டர்களால் உருவாக்கப்படும், அல்லது அவர்களால் மற்றவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆற்றல் அல்ல. இந்த பால்வெளியும், உலகமும், தோன்றும் போது தோன்றியது இந்த பிரபஞ்சச் சக்தி.
ரெய்கி மாஸ்டர்கள், இந்த இயற்கை ஆற்றலை இரவல் வாங்கி, அதைத் தேவைப்படும் நபர் மீதோ, பொருள் மீதோ, இடத்தின் மீதோ செலுத்துகிறார்கள். உதாரணத்துக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து, ஒரு வாளி தண்ணீரை அள்ளி நம் தேவைக்கு பயன்படுத்துவதைப் போன்ற செயல்தான் இது.
“ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இருக்கின்ற வேற்றுமைகள் திறமையினால் உருவானவை அன்று; அவை ஆற்றலினால் உருவானவை”. – தோமஸ் அர்னால்டு