ஹோலிஸ்டிக் ரெய்கி
புதிய மேம்படுத்தப் பட்ட பாடத்திட்டத்துடன் நான்கு நிலைகளாகப் பிறக்கப் பட்டுள்ளது.

தி பிகினர் – 1st Degree
ஹோலிஸ்டிக் ரெய்கியின் தொடக்கநிலை வகுப்பாகும், புதிதாக ரெய்கியை அறிந்துகொண்டு, தீட்சை பெற்று, பயிற்சி செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற நிலையாகும். இதில் பிரபஞ்ச ஆற்றலைக் கிரகிக்கும் முதல் தீட்சை வழங்கப்படும். தனிநபர் மற்றும் குடும்ப நலன்களுக்காக இதன் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி ப்ராக்டிஸினர் – 2nd Degree
ஹோலிஸ்டிக் ரெய்கியின் இரண்டாம் கட்ட பயிற்சி தனிநபரின் ரெய்கி நிலையையும் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள உதவும். தனிநபர் மற்றும் குடும்ப நலன்களுக்காக இதன் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி ஹீலர் – 3rd Degree
ஹோலிஸ்டிக் ரெய்கியில் மூன்றாம் நிலை பயிற்சி “தி ஹீலர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தொட்டும், தொடாமலும் ஹீலிங் செய்ய மற்றும் தொலை தூர ஹீலிங் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படும்.

தி மாஸ்டர்
ஹோலிஸ்டிக் ரெய்கியின் நான்காவது நிலை “தி மாஸ்டர்” ஆகும். ரெய்கி கலையில் முழுமை பெறுவதற்கும், ரெய்கி ஹீலர் மற்றும் மாஸ்டராக பயிற்சி செய்வதற்கும் இந்த நிலை ஏற்றது.