
ஹோலிஸ்டிக் ரெய்கி
ரெய்கி என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் படைப்பாற்றலாகும். இந்த ஆற்றலை முறையாகக் கிரகித்து வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் தங்களின் வாழ்க்கையில் தொந்தரவாகவும் தடையாகவும் இருக்கும் விஷயங்களை ஒதுக்கி, தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு திருப்தியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இந்த ரெய்கி (பிரபஞ்ச ஆற்றல்) ஆற்றலை எவ்வாறு முறையாக தங்களின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதுதான் ரெய்கி பயிற்சியாகும்.
இந்த பயிற்சி புதிய மேம்படுத்தப் பட்ட பாடத்திட்டத்துடன் நான்கு நிலைகளாகப் பிறக்கப் பட்டுள்ளது.